மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர்
பவரில் சமரசம் செய்து கொள்ளாமல் எரிபொருள் சிக்கனமான மஹிந்திரா 2WD டிராக்டரைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? எங்கள் மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர் உங்களுக்குச் சரியான பொருத்தமாக இருக்கும் என்பதால், மேற்கொண்டு நீங்கள் தேட வேண்டியதில்லை! இந்த நவீன டிராக்டரில் நான்கு சிலிண்டர்களைக் கொண்ட 32.8 kW (44 HP) என்ஜின், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 kg ஹைடிராலிக்ஸ் தூக்கும் திறன் உள்ளது. எப்போதும் மஹிந்திரா SP PLUS டிராக்டர்கள் அவற்றின் தொழில்நுட்ப அளவில் நவீன டிஸைனுக்காக மிகவும் பிரபலமானவை, இந்த மஹிந்திரா 2x2 டிராக்டரும் அதைப் பொய்யாக்கவில்லை. மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர், மிகச் சிறந்த 29.2 kW (39.2 HP) PTO பவர் மற்றும் அதிகத் திறனுடன் வேலை செய்வதற்கான அதிக பேக்அப் டார்க் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகின்ற ஒரு 2WD டிராக்டர் ஆகும், . இந்த SP பிளஸ் மஹிந்திரா டிராக்டர் பல்வேறு விவசாய வேலைகளுக்குப் பொருத்தமானது. எனவே, மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர்களைக் கொண்டு, குறைவான நேரத்தில் அதிக வேலைகளை நீங்கள் சௌகரியமாகச் செய்யலாம்.
விவரக்குறிப்புகள்
மஹிந்திரா 475 DI SP பிளஸ் டிராக்டர்- இயந்திர சக்தி (kW)32.8 kW (44 HP)
- அதிகபட்ச முறுக்கு (Nm)185 Nm
- அதிகபட்ச PTO சக்தி (kW)29.2 kW (39.2 HP)
- மதிப்பிடப்பட்ட RPM (r/min)2000
- கியர்களின் எண்ணிக்கை8 F + 2 R
- எஞ்சின் சிலிண்டர்களின் எண்ணிக்கை4
- திசைமாற்றி வகைடூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் / மேனுவல் ஸ்டீயரிங் (ஆப்ஷனல்)
- பின்புற டயர் அளவு345.44 மிமீ x 711.2 மிமீ (13.6 அங்குலம் x 28 அங்குலம்)
- பரிமாற்ற வகைபார்ஷியல் கான்ஸ்டன்ட் மெஷ்
- ஹைட்ராலிக் தூக்கும் திறன் (கிலோ)1500
சிறப்பு அம்சங்கள்
- கல்டிவேட்டர்
- M B கலப்பை (மேனுவல்/ஹைடிராலிக்ஸ்)
- ரோட்டரி டில்லர்
- கிரோவேட்டர்
- கொத்துக் கலப்பை
- டிப்பிங் டிரெய்லர்
- முழுக் கூண்டு சக்கரம்
- அரைக் கூண்டு சக்கரம்
- ரிட்ஜர்
- விதைப்பான்
- லெவலர்
- த்ரெஷர்
- போஸ்ட் ஹோல் டிக்கர்
- விதை டிரில்