இந்தியாவில் 10 சிறந்த 40-45 ஹெச்பி மஹிந்திரா டிராக்டர்கள்
இந்திய விவசாயத் துறையில், நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றின் அடையாளங்களாக மஹிந்திரா டிராக்டர்கள் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளன. பல தசாப்தங்களாக பரவியுள்ள பாரம்பரியத்துடன், நிறுவனம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி, புதுமையை புகுத்துவத்தில் முன்னணியில் உள்ளது. இந்த வலைப்பதிவில் 10 40-45 குதிரைதிறன் கொண்ட மஹிந்திரா டிராக்டர்களை பற்றி அறிந்து கொள்வோம், அவற்றின் ஆற்றல், பலவிதமான செயல்பாடுகள் மற்றும் மதிப்பு ஆகியவற்றிற்காக தனித்துவம் பெற்று திகழ்கின்றன. அவை இந்திய விவசாயிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.
மஹிந்திரா 415 DI XP PLUS
நவீன விவசாயத்தின் தேவையை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்ட 415 DI XP Plus ஆனது நிலையான செயல்திறனை வழங்கும் நம்பகமான மற்றும் திறமையான டிராக்டர் ஆகும். உங்களின் அனைத்து விவசாயத் தேவைகளுக்கும் இது ஒரு பவர்ஹவுசாக உள்ளது. அதன் வலுவான 31.3 கிலோவாட்ஸ் (42 ஹெச்பி) இஎல்எஸ் இன்ஜின் 179 என்எம் டார்க்குடன் கடினமானதாகவும் திறமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் எந்த ஒரு பணியையும் எளிதாக சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் வயலை உழுகிறீர்களோ, பயிர் நடுகிறீர்களோ அல்லது அதிக சுமையை ஏற்றிச் செல்கிறீர்கள் என்றாலும், இதன் செயல்பாடு வியப்பூட்டுவதாக உள்ளது. இந்த சுவாரசியமான இயந்திரம் இரண்டு பங்கு - பவர் ஸ்டீயரிங், சிரமமற்ற செயல்திறன் மற்றும் வியந்து போகும் அளவு 1500 கிலோ எடையுள்ள ஹைட்ராலிக்சை தூக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இது ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இத்தகைய உத்தரவாதம் - தொழில்துறையில் இதுவே முதல் முறையாகும். இந்த 2-வீல்-டிரைவ் இயந்திரம் மென்மையாக அதிர்வில்லாமல் நகர்வதோடு, குறைந்த பராமரிப்புக் கட்டணம், நன்றாக இழுப்பதற்கான பெரிய டயர்கள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்கிறது. வயலில் வேலை செய்யும் போது ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கு அழகான பொத்தானையும் கொண்டுள்ளது.
மஹிந்திரா 475 DI XP PLUS
475 XP PLUS என்பது அசாதாரண செயல்திறன் கொண்ட டிராக்டர் ஆகும், இது மிகவும் கடினமான விவசாயப் பணிகளை எளிதாகச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய மாடல் 32.8 கிலோ வாட்ஸ் (44 HP) DI இன்ஜின் 172.1 என்எம் டார்க், நான்கு சிலிண்டர்கள், டூயல்-ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 கிலோ ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறன் கொண்டுள்ளது. அதன் குறிப்பிடத்தக்க 29.2 கிலோ வாட்ஸ்(39.2 ஹெச்பி) பிடிஓ ஆற்றல் பல்வேறு உழவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மேம்பட்ட செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது ஆறு ஆண்டு கால உத்தரவாதத்துடன் வருகிறது மற்றும் ஒப்பிடமுடியாத நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை வழங்குகிறது, விவசாயிகள் தங்கள் இலக்குகளை அடைய உத்திரவாதம் அளிக்கிறது. தடையற்ற இயக்கம், நேர்த்தியான வடிவமைப்பு, வசதியான இருக்கைகள், அசாதாரண பிரேக், குறைந்த பராமரிப்பு மற்றும் இணையற்ற இழுவைக்கான பெரிய டயர்கள் ஆகியவற்றுடன், இந்த விதிவிலக்கான தயாரிப்பு விவசாயிகளுக்கு தவிர்க்க முடியாத தேர்வாகும்.
மஹிந்திரா 475 DI MS XP PLUS
475 DI MS XP PLUS ஆனது அதன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஒப்பற்ற நம்பகத்தன்மையுடன் உங்கள் விவசாய உற்பத்தித்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் செயல்திறனை மேம்படுத்தி மகசூலை அதிகரிக்க உங்களுக்கு இந்த டிராக்டர் உதவுகிறது. 179 என்எம் டார்க்குடன் கூடிய இந்த புதிய இயந்திரம் வலுவான 31.3 கிலோ வாட்ஸ் (42 ஹெச்பி) DI இன்ஜின், நான்கு சிலிண்டர்கள் மற்றும் டூயல்-ஆக்டிங் பவர் ஸ்டீயரிங்கை கொண்டுள்ளது, இது பல்வேறுபட்ட விவசாய பணிகளை சிரமமின்றி கையாள உதவுகிறது. 1500 கிலோ ஹைட்ராலிக்சை தூக்கும் திறன் உள்ளதால், நீங்கள் இதைக் கொண்டு எந்த தொந்தரவும் இல்லாமல் அதிக சுமைகளை தூக்கி சமாளிக்க முடியும். 27.9 கிலோவாட்ஸ் (37.4 ஹெச்பி) பிடிஓ இருப்பதால், இந்தத் தயாரிப்பு உங்களின் சாகுபடி சம்மந்தப்பட்ட அனைத்து தேவைகளுளையும் பூர்த்தி செய்வதற்கானஉத்தரவாதம் அளிக்கிறது. நன்கு சிந்தித்து உழவு சார்ந்த பணிகளுக்கு ஏற்றவாறு வடிவமைகக்கப்பட்டுள்ளது, நீண்ட நேரம் இதை பயன்படுத்துபவருக்கு தேவையான வசதிகளை கொண்டுள்ளதோடு உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கும் உறுதி செய்கிறது. இது உங்களுக்கு நிகரற்ற மன அமைதியை வழங்கும். ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது.
மஹிந்திரா 415 DI SP PLUS
415 DI SP PLUS ஆனது உங்கள் விவசாய வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலிமைமிக்க இயந்திரம் ஒப்பிடமுடியாத எரிபொருள் திறன் கொண்டுள்ளது. நவீன விவசாயத்தின் புதிய முறைகளுக்கு தாக்கு பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 30.9 கிலோ வாட்ஸ் (42 ஹெச்பி) DI இன்ஜின், நான்கு சிலிண்டர்கள், டூயல் ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 கிலோ ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறன் இந்த டிராக்டரில் உள்ளது. இது மிகச் சிறந்த ஆற்றல் கொண்டுள்ளது மற்றும் இது போன்ற டிராக்டர்களின் வகைகளில் இதன் எரிபொருள் நுகர்வு மிகக் குறைவு. நீங்கள் குறுகிய காலத்தில் அதிக வேலைகளை செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது. இந்தத் துறையில் முதன் முறையாக ஆறு வருட உத்தரவாதத்துடன் வருவது இது தான். இதன் வடிவமைப்பு கவர்ச்சியானது. வசதியான இருக்கை, அதிக நிலத்தை சீக்கிரம் உழுவதற்கு அதிகபட்ச டார்க் , மேலும் பல எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்பு குறிப்பிடத்தக்க வகையில் 27.9 கிலோ வாட்ஸ் (37.4 ஹெச்பி) பிடிஓவைக் கொண்டுள்ளது, இது பலதரப்பட்ட பணிகளைச் செய்வதற்கும், மேம்பட்ட செயல்திறனுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
மஹிந்திரா 475 DI SP PLUS
475 DI SP PLUS ஆனது அதன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஒப்பிடமுடியாத நம்பகத்தன்மையுடன் உங்கள் செயல்திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த டிராக்டர் சக்தியை இழக்காமல் எரிபொருளை சேமிக்கிறது. இது நான்கு சிலிண்டர் 32.8 கிலோவாட்ஸ்(44 ஹெச்பி) இன்ஜின், டூயல்-ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 கிலோ எடையுள்ள ஹைட்ராலிக்ஸ் தூக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த இயந்திரம் எப்பொழுதும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட வடிவமைப்பிற்காக அறியப்படுகிறது, மேலும் இந்த 2x2 மாடலும் சோடை போகவில்லை. இது 2-வீல்-டிரைவ் மாடலாகும், இது ஒரு குறிப்பிடத்தக்க 29.2 கிலோவாட்ஸ் (39.2 ஹெச்பி) பிடிஓ ஆற்றல் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட செயல்பாடுகளுக்கான ஹை பேக்கப் டார்க் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்துடன் வருகிறது. இந்த தயாரிப்பு பல்வேறு விவசாய பயன்பாடுகளுக்கு ஏற்றது மற்றும் அதன் பணிச் சூழலுக்கு தகுந்தார் போல வடிவமைகக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் இதை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான சவுகரியத்தையும், உற்பத்தித்திறனையும் உறுதி செய்கிறது.
மஹிந்திரா 475 DI MS SP PLUS
475 DI MS SP PLUS ஆனது உங்கள் விவசாயம் சார்ந்த வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வலிமைமிக்க இயந்திரம் ஒப்பிடமுடியாத எரிபொருள் திறனுடன் உள்ளது. இது 30.9 கிலோ வாட்ஸ் (42 ஹெச்பி) DI இன்ஜின், நான்கு சிலிண்டர்கள், டூயல்-ஆக்டிங் பவர் ஸ்டீயரிங் மற்றும் 1500 கிலோ ஹைட்ராலிக்சை தூக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த டிராக்டர் சிறந்த பவருடன் இயங்குகிறது. மற்றும் அதன் பிரிவில் குறைந்த எரிபொருளில் இயங்குகிறது, நீங்கள் குறுகிய காலத்தில் அதிக வேலைகளை செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது. இது ஆறு ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது, கவர்ச்சிகரமான வடிவமைப்பு, வசதியான இருக்கை, அதிக நிலத்தை உழுவதற்கு அதிகபட்ச டார்க் மற்றும் எண்ணற்ற பல வசதிகள் உள்ளன. இந்த இயந்திரம் ஒரு குறிப்பிடத்தக்க 27.9 கிலோ வாட்ஸ் (37.4 ஹெச்பி)பிடிஓ சக்தியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது பரந்த அளவிலான பணிகளைச் செய்வதற்கு மேம்பட்ட செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மகிந்திரா 415 YUVO TECH+ 4WD
415 YUVO TECH+ 4WD இன் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப திறன்கள் உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நீங்கள் விரும்பியதை அடைவதில் உங்களுக்கு ஆதரவளிக்கவும் சிந்தித்து வடிவமைக்கப்பட்திருக்கிறது. 31.33 கிலோவாட்ஸ் (42 ஹெச்பி) இன்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1700 கிலோ ஹைட்ராலிக் தூக்கும் திறன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அம்சங்களை இது கொண்டுள்ளது. 3-சிலிண்டர் M-Zip இன்ஜின் மற்றும் 28.7 கிலோ வாட்ஸ் (38.5 ஹெச்பி) பிடிஓ பவர் மூலம் இது நல்ல ஆற்றலோடு, துல்லியம் மற்றும் சிறந்த-தரத்துடன்- அதிக மைலேஜை வழங்குகிறது. இந்த வசதியான இருக்கைகள், பல கியர் ஆப்ஷன்கள் உள்ளன. மென்மையான நிலையான மெஷ் டிரான்ஸ்மிஷன், துல்லியமான ஹைட்ராலிக்ஸ் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது. அதன் பல விவசாய பயன்பாடுகளுடன், இந்த 4 வீல்-டிரைவ் மாடல் விவசாய வணிகங்களில் புரட்சியை ஏற்படுத்தும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மற்றும் லாபத்தை அதிகரிக்கும்.
மஹிந்திரா 415 YUVO TECH+
415 YUVO TECH+ ஆனது உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உகந்த முடிவுகளை எடுப்பதில் உங்களுக்கு உதவவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 31.33 கிலோ வாட்ஸ் (42 ஹெச்பி) இன்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1700 கிலோ ஹைட்ராலிக் தூக்கும் திறன் போன்ற தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. 3-சிலிண்டர் M-Zip இன்ஜின் மற்றும் 28.7 கிலோ வாட்ஸ் (38.5ஹெச்பி) பிடிஓ, சநல்ல ஆற்றல், துல்லியம் மற்றும் சிறந்த-தரத்துடன்-அதிக மைலேஜை வழங்குகிறது. இதில் வசதியான இருக்கைகள், பல கியர் ஆப்ஷன்கள் உள்ளன. மென்மையான நிலையான மெஷ் டிரான்ஸ்மிஷன், உயர்ந்த துல்லியமான ஹைட்ராலிக்ஸ் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது. பல விவசாய பயன்பாடுகளுடன், இந்த டிராக்டர் விவசாய வணிகங்களில் புரட்சியை ஏற்படுத்துவதோடு, உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது மற்றும் லாபத்தையும் அதிகரிக்கிறது.
மஹிந்திரா 475 YUVO TECH+
45 YUVO TECH+ உற்பத்தித்திறனை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. 33.8 கிலோவாட்ஸ் (44 ஹெச்பி) இன்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1700 கிலோ எடையுள்ள ஹைட்ராலிக்சை தூக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்ட இந்த இயந்திரம் இணையற்ற ஆற்றலையும் செயல்திறனையும் வழங்குகிறது. அதன் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சங்களில் ஒன்று அதன் நான்கு சிலிண்டர் இஎல்எஸ் இன்ஜின் ஆகும், இது சிறந்த-தரத்துடன்-அதிக மைலேஜ் மற்றும் 30.2 கிலோவாட்ஸ் (40.5 ஹெச்பி) பிடிஓ, இணையான குளிர்ச்சி மற்றும் அதிக அதிகபட்ச டார்க் ஆகியவற்றை வழங்குகிறது. இதில் வசதியான இருக்கைகள், பல கியர் ஆப்ஷன்கள், மென்மையான நிலையான மெஷ் டிரான்ஸ்மிஷன், உயர்ந்த துல்லியமான ஹைட்ராலிக்ஸ் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது. கூடுதலாக, உங்கள் வேலையை எளிதாக்க, இந்த டிராக்டரில் பல ஃபார்மிங் அப்ளிகேஷன்ஸ் ஃபார்மிங் அப்ளிகேஷன்ஸ் உள்ளது.
மஹிந்திரா 475 YUVO Tech+ 4WD
475 YUVO TECH+ 4WD என்பது இது போன்ற இயந்திரங்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் தரத்தை விட மிக சக்திவாய்ந்த மற்றும் திறமையான இயந்திரமாகும். 33.8 கிலோ வாட்ஸ் (44 ஹெச்பி) இன்ஜின், பவர் ஸ்டீயரிங் மற்றும் 1700 கிலோ ஹைட்ராலிக்சை தூக்கும் திறன் ஆகியவற்றினால் ஒப்பிடமுடியாத சக்தி மற்றும் செயல்திறனை இது வழங்குகிறது. நான்கு சிலிண்டர் இஎல்எஸ் இன்ஜின் சிறந்த மைலேஜ் மற்றும் பிடிஓ பவர் 30.2 கிலோ வாட்ஸ் (40.5 ஹெச்பி), அதனுடன் அதிகம் சூடாகாத குளிர்ந்த தன்மை மற்றும் அதிக டார்க் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதலாக, இந்த டிராக்டர் வசதியான இருக்கைகள், பல கியர் ஆப்ஷன்ங்கள், மென்மையான டிரான்ஸ்மிஷன், துல்லியமான ஹைட்ராலிக்ஸ் மற்றும் ஆறு வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இந்த இயந்திரம் பல்வேறுபட்ட விவசாய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் உற்பத்தித்திறனில் ஒரு அற்புதமான புரட்சியை வழங்குகிறது.
மஹிந்திரா தயாரிப்புகள் நீண்ட காலமாக அதன் சக்தி, நம்பகத்தன்மை மற்றும் புதுமைக்கு பெயர் போனதாக உள்ளது, மேலும் இதன் 40-45 குதிரைத்திறன் வரம்பும் அளப்பரியது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் நிறுவனத்தின் பொறியியல் வல்லமையின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, இந்திய விவசாயிகளின் பல்வேறு தேவைகளை அவர்களின் சிறந்த செயல்திறன், பல்வேறுபட்ட வேலைகள் அவற்றின் தரமும் மதிப்பிம் குறையாமல் பூர்த்தி செய்கின்றன.வயல்களை உழுது, மண் அள்ளுவது அல்லது பயிர்களை அறுவடை செய்வது என எதுவாக இருந்தாலும், இந்த மஹிந்திரா டிராக்டர்கள், இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அதிகபட்ச உற்பத்தி மற்றும் லாபத்தை உறுதி செய்யும் வகையில், எந்த சவாலையும் சமாளிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலுடன், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான டிராக்டர் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். விரிவான தகவலுக்கு உங்கள் அருகில் உள்ள விநியோகஸ்தரை தொடர்பு கொள்ளவும். ஹேப்பி ஃபார்மிங்!