மஹிந்திரா டிராக்டரின் உருளைக்கிழங்கு சாகுபடிக்கான கையேடு

Jul 4, 2023 |

நெற்பயிர் சாகுபடி என்பது இந்தியாவின் மிகவும் பரவலாகக் காணப்படும் சாகுபடி முறைகளில் ஒன்றாகும், நெல் பயிரிடுவதற்கு சிறிய, நீர் தேங்கி நிற்கக்கூடிய வயல்கள் அவசியம். இந்த விவசாய முறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, மண் இறுக்கமாக அல்லாமல் தளர்வாகவும், நீர் நிரம்பியும் இருக்கும்போது, நிலத்தை உழுவதற்கு அதற்கேற்ற சரியான வகை டிராக்டரைப் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் நெல் வயலுக்கு ஒரு டிராக்டரைத் தேர்ந்தெடுக்கும்போது, அது உங்களுக்கு ஏற்றதா, வியர்வையை சிந்தாமல் உங்கள் அனைத்து பணிகளையும் செய்ய முடியுமா என்பதையும் நீங்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, நெல் வயல்களுக்கு இந்தியாவில் சிறந்த டிராக்டரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு சிறிய வழிகாட்டி இங்கே.

சரியான டிராக்டரைத் தேர்ந்தெடுத்தல்

நெல் சாகுபடிக்கு ஒரு டிராக்டரைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆராய வேண்டும். எடுத்துக்காட்டாக, உங்கள் டிராக்டருக்கு எவ்வளவு குதிரை திறன் தேவைப்படும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். வழக்கமான நெல் நடவுக்கு நீங்கள் குறைந்த குதிரைத்திறன் கொண்ட டிராக்டரைப் பயன்படுத்தலாம், ஆனால் சுமை தூக்குதல் போன்ற கடினமான பணிகளைச் செய்ய, நீங்கள் 30 HP வரை கொண்ட டிராக்டரைத் தேர்வு செய்யலாம்.

அடுத்ததாக, நீங்கள் 2WD மற்றும் 4WD டிராக்டர்களுக்கு இடையே ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். சாதாரண நெல் நடவு பணிகளுக்கு 2WD டிராக்டர் சிறந்தது மட்டுமல்லாது பொருத்தமானதும்கூட. நெல் வயலானது சேறாகவும் நீர் நிறைந்திருந்தபோதிலும் டிராக்டரின் முன் சக்கரத்தின் அச்சு டிராக்டரை மண்ணில் சிக்கிக்கொள்ள விடாது, மேலும் இந்த வகை டிராக்டர்களைப் பராமரிப்பது எளிதான காரியம் என்பதால் நெல் நடவுக்கு 2 4WD டிராக்டர் சிறந்தது. ஒரு 4WD நெல் நடவு டிராக்டர் மிகவும் பெரிய நெல் வயல்கள், தளர்வான மண் அல்லது கனமான கருவிகளுடன்கூட இணைத்து பயன்படுத்துவதற்கு ஏற்றது. மேலும், மஹிந்திரா டிராக்டரை தேர்வு செய்தால், அதன் மற்ற அம்சங்களின் நன்மைகளையும் அனுபவிக்கலாம். முக்கியமாக சொல்வதென்றால், மஹிந்திரா டிராக்டர்கள் இதன் பிரிவிலேயே சிறந்த ஹைட்ராலிக்ஸைக் கொண்டுள்ளன, இதன் மூலம் கனமான பொருட்களை இழுத்துச்செல்லவும், அதிக தண்ணீரை பாய்ச்சவும் முடியும். மேலும், பவர் ஸ்டீயரிங், டூயல் கிளட்ச் கொண்ட கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷன், அட்ஜெஸ்ட் டபிள் இருக்கைகள், எளிதில் தொட்டு இயக்கக்கூடிய கட்டுப்பாடுகள் மற்றும் LCD கிளஸ்டர்கள் போன்ற அம்சங்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்.

ஏன் மஹிந்திரா டிராக்டரை வாங்க வேண்டும்?

இதற்கான பதில் தெளிவாக இருக்கிறது - நெல் சாகுபடிக்கு முக்கியமானதாக கருதப்படும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அத்தியாவசிய அம்சங்களும் மஹிந்திரா ரக டிராக்டர்களில் உள்ளன. நெல் சாகுபடிக்கு என அதிகமான விவசாயிகளால் வாங்கப்படும் டிராக்டர் மஹிந்திரா ஜிவோ ரக டிராக்டர்கள்தான். இவற்றை குறித்து கீழே விரிவாக அலசிஆராய்வோம்:

மஹிந்திரா ஜிவோ 305 DI 4WD டிராக்டர்தான் DI எஞ்சினுடன் வருகின்ற 18.2 kW (24.5 HP) 4WD டிராக்டர் ஆகும். இது ஈடு இணையில்லா செயல்திறனுடன் பல பணிகளை செய்ய உங்களுக்கு உதவுகிறது. அதிகபட்சமாக 89 Nm டார்க் திறனும், 18.2 kW (24.5 HP) PTO சக்தியையும் கொண்ட இந்த டிராக்டர் நெல் சாகுபடிக்கு ஏற்ற பொருத்தமான டிராக்டராகவும், சிறிய விவசாய நிலங்களில்கூட எளிதாக இயக்கக்கூடியதாகவும் உள்ளது.

ஒப்பிட்டுப் பார்த்தால், மஹிந்திரா ஜிவோ 365 DI 4WD மோட்டார்சைக்கிள் அதிகபட்சமாக 118 Nm டார்க் திறனையும், 22.4 kW (30 HP) PTO சக்தியையும் வழங்குகிறது. இதன் எஞ்சின் சக்தி 26.8 kW (36 HP). நெல் வயல்களில் பயன்படுத்தும் வகையில் இந்த டிராக்டர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரிவிலேயே சிறந்த எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துவதால் அதிக மைலேஜை அளிக்கிறது. புதுமையான பொசிஷன்-ஆட்டோ கன்ட்ரோல் (PAC) தொழில்நுட்பம் கொண்ட முதல் டிராக்டர் இதுவாகும். வயலின் சேற்றுப்பகுதிகளில் ஓட்டிச் செல்வதில் இதற்கு நிகர் எதுவுமில்லை, அதாவது உங்கள் நெல் வயலில் பணிகள் செய்துகொண்டிருக்கும் போது உங்கள் PC லீவரை நீங்கள் அடிக்கடி அட்ஜஸ்ட் செய்யவேண்டிய அவசியமிருக்காது, மேலும் டிராக்டர் சிறந்த செயல்திறனை வழங்கும் போது உங்கள் பணியை எளிதாகவும் விரைவாகவும் முடித்துவிடலாம்.

மேலும் நீங்கள் மிகவும் மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்பத்தை விரும்பினால், மஹிந்திரா ஜிவோ 245 DI ரக டிராக்டர்களைத் தேர்வு செய்யலாம். ஜிவோ 245 DI மாடலில் 14.9 kW (20 HP) முதல் 26.84 kW (36 HP) வரையிலும் மற்றும் 73 Nm முதல் 118 Nm டார்க் திறனையும் வழங்கும் சக்திவாய்ந்த ELS DI எஞ்சின் உள்ளது. இந்த பவர் 8 8F+4R கான்ஃபிகரேஷனில் கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொண்ட சக்கரங்களுக்கு (2WD அல்லது 4WD) மாற்றப்படுகிறது. ஜிவோ 245 டிராக்டர்கள் ஆட்டோமேட்டட் டிராஃப்ட் மற்றும் டெப்த் மேனேஜ்மென்ட் ஹைட்ராலிக் அமைப்புகளுடன் வருகின்றன, இது மண்ணுக்குள் அனைத்து இடங்களிலும் ஒரே சீராக ஆழப்படுத்துகின்றன . ஹைட்ராலிக்ஸ் அமைப்பு 750 கிலோ வரை தூக்கும் திறன் மற்றும் 3000 கிலோ வரை இழுக்கும் சக்தியைக் கொண்டுள்ளது, இந்த மஹிந்திரா டிராக்டர்கள் நெல் நடவு செய்வதற்கு, உழவுவதற்கு மற்றும் இழுப்பதற்கு ஏற்றவை.

இறுதியாக, ஜிவோ சீரிஸ் டிராக்டர்கள் பயனாளிகளுக்கு சௌகரியம் என்று வரும்போது எந்தவிதமான சமரசமும் செய்யாது, ஆக அனைத்துவிதமான சௌகரிய அம்சங்களையும் கொண்டுள்ளது. அட்ஜஸ்டபிள் இருக்கைகள், எளிதில் தொடக்கூடிய கட்டுப்பாடுகள், டூயல் க்ளட்ச், பவர் ஸ்டீயரிங் - இவை அனைத்தும் உங்களுக்கு மென்மையான, இனிமையான மற்றும் வசதியான விவசாய சூழலை வழங்குகின்றன.

சரியான கருவிகளைத் தேர்ந்தெடுத்தல்

டிராக்டர் மட்டுமல்லாது, நெல் சாகுபடிக்கு ஏற்ற சரியான கருவிகளும் கொண்டிருப்பது அவசியம். இந்த இடத்தில், மஹிந்திரா ஹார்வெஸ்ட் மாஸ்டர் H12 4WD உங்களுக்கான மிகச்சிறந்த தேர்வாகும், ஏனெனில் இது சீக்கிரத்திலேயே வயல் பகுதி முழுவதையும் அடைந்து பணிகளை முடிக்கிறது, தானியங்களின் இழப்பு குறைவாக உள்ளது, எரிபொருளை மிச்சப்படுத்துகிரது மற்றும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. மஹிந்திரா அர்ஜூன் நோவோ சீரிஸ் டிராக்டர்களை முழுமையாக்கும் வகையில் மல்டி-க்ராப் டிராக்டர் மவுண்டட் கம்பைன் ஹார்வெஸ்டரை மஹிந்திரா டிராக்டர் வடிவமைத்துள்ளது. இது 41.56 kW முதல் 47.80 kW வரை எஞ்சின் பவரை வழங்குகிறது, இதன் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்கு இடையிலான மேடான கரைகளை எளிதாக கடக்கிறது. கூடுதலாக, அதன் சிறந்த கட்டர் பார் விசிபிளிட்டி பயிர் அறுவடையை எளிதாக்குவது மட்டுமல்லாமல் பல பணிகளிக்கு பயன்படுகிறது.

விலைப் பக்கத்தைப் பார்க்கவும்

மஹிந்திரா வழங்கும் 35+ டிராக்டர்களில், உங்களுக்கு மிகவும் பொருத்தமான டிராக்டரை நீங்கள் தேர்வு செய்யலாம். எங்கள் டிராக்டர்களை வாங்கினால், வழக்கமாக ஏற்படுகின பழுதுகள் மற்றும் பராமரிப்பு, எரிபொருள் அதிகம் செலவாவது, சீரற்ற மின் விநியோகம் அல்லது எந்தவிதமான பிரச்சனையையும் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு சிறந்ததை நாங்கள் வழங்குகிறோம்.

நெல் வயல்களுக்கு மிகவும் பொருத்தமான மஹிந்திராவின் டிராக்டர்களை வாங்கி இயக்கச் செலவுகளைக் குறைத்து நெல் சாகுபடியை எளிமையாக்குங்கள், உங்கள் மகசூலை கணிசமாக அதிகரியுங்கள். எங்கள் டிராக்டர்களைப் பற்றி மேலும் அறிய விலைப் பக்கத்தைப் பார்க்கவும்.

Connect With Us

நீயும் விரும்புவாய்